விதை  கிராமம் என்றால் என்ன? 
        விதை கிராமம் என்றால்  ஒரு குறிப்பிட்ட கிராமங்களில் பயிற்சியளிக்கப்பட்ட விவசாயிகள் உற்பத்தி செய்த பயிர்  விதைகளை தங்கள் தேவைக்கும் தங்கள் கிராமங்களில் உள்ள விவசாயிகளுக்கும் மற்றும் அடுத்த  கிராமத்தில் உள்ள விவசாயிகளுக்கும் குறிப்பிட்ட நேரத்தில் தகுந்த விலையில் விதைகளை  பரிமாறிக் கொள்கின்றனர். 
        கருத்துக்கள்: 
      
        - விதைகளை ஒரே இடத்தில் உற்பத்தி செய்யலாம்
 
        - பழைய இரகங்களுக்கு பதிலாக புதிய இரகங்களை  மாற்றம் செய்யலாம்
 
        - விதை உற்பத்தியை அதிகரிக்கலாம்
 
        - உள்ளூர் தேவைக்காக தகுந்த நேரத்தில்,  தகுந்த விலையில் விதைகளை விநியோகம் செய்யலாம்
 
        - கிராமங்களில் சுயசார்பு மற்றும் தன்னிறைவு  அடையலாம்
 
        - விதை மாற்ற விகிதத்தை அதிகரிக்கலாம்
 
     
      சிறப்பியல்புகள்: 
      
        - அனைத்துப் பண்ணைகளிலும் உரிய நேரத்தில்  விதைகள் கிடைக்கும்
 
        - சந்தை விலையை விட குறைவான விலையில் விதைகள்  கிடைக்கும்
 
        - விவசாயிகள் சுயமாக விதைகளை உற்பத்தி  செய்வதால் அவர்களிடம் தரத்தின் மேல் அதிகப்படியான தன்னம்பிக்கை அடைந்துள்ளனர்
 
        - விற்பனையாளர் மற்றும் நுகர்வோர், இதனால்  சமமாக பயன் அடைந்துள்ளனர்
 
        - புதிய வகையான ரகங்களை அனைவருக்கும் உடனடியாக  கிடைக்கச் செய்கின்றன      
 
        |